"பொதுமக்களில் பலரும் எங்களுக்கு போன் செய்து, அவர்கள் விருப்பத்தைக் கூறினர். மனசாட்சிப் படி, சட்டசபையில் ஓட்டளிக்கவில்லை என்றால், ஊர் பக்கம் வர முடியாது என, அன்போடு மிரட்டல் விடுத்தனர். அது பொதுமக்களின் எதிர்பார்ப்புதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்தால், இன்னோரு தேர்தலை சந்திப்பது, எங்களைப் போன்ற எம்.எல்.ஏ.,க்களுக்குத்தான் நெருக்கடி என்பது, அவர்களுக்கு தெரியாது; அது பற்றிய அக்கறையும் அவர்களுக்கு தேவையில்லை. எட்டு மாதங்களுக்கு முன், கிட்டதட்ட ஐந்து கோடிக்கும் மேல் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆன என்னைப் போன்றவர்கள், இன்னும் விதைத்த பணத்தை எடுக்கவே இல்லை. அதற்குள் இன்னொரு தேர்தல் என்றால், பணத்துக்கு எங்கே செல்வது? யார் கொடுப்பர்? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி கேட்கப்படும்… இத்தனையையும் மீறி, ஐந்து வருடம் சென்று, நீங்கள் தொகுதிக்குச் சென்று, தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் ஓட்டளிப்பரா என்று. அதெல்லாம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தானே… அதற்குள் இன்னும் என்னவெல்லாம் அரசியல் ரீதியில் நடக்குமோ. நான் கு ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை, இப்போது கணிக்கவும் முடியாது. அதற்காக, இப்போதிலிருந்தே கவலைப்படவும் முடியாது. எப்படியோ, ஓ.பன்னீர்செல்வம் புண்ணியத்தில், பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம். அந்த வகையில், பன்னீருக்காக உதவி செய்ய முடியவில்லை என்றாலும், அவருக்கு கட்டாயம் நன்றி சொல்லவே கடமைபட்டிருக்கிறோம். எதற்கெடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்கிறவர்களுக்கு, ஒரே ஒரு கேள்வியையும் இந்த நேரத்தில் கேட்க ஆசைப்படுகிறேன். இப்படியெல்லாம், கேள்வி கேட்க முற்படும் பொதுமக்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதலாக யார் பணம் கொடுப்பார் என எதிர்பார்த்து, ஏங்கி, அது கிடைத்ததும் தானே ஓட்டு போடுகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து, நாங்கள் செய்வதை நியாயமா… தர்மமா என்று எப்படி கேட்க முடியும். - do we still need anymore explanation Both OPS and Mr Stalin can nt be trusted anymore. They do not have money power and guts
more